இந்தியா-இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 12-வது சுற்றுப் பேச்சுவார்த்தை.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த (எஃப்.டி.ஏ) பன்னிரெண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் 2023 ஆகஸ்ட் 8-ம்தேதி முதல் 31-ந் தேதி  வரை நடைபெற்றன. முந்தைய சுற்றுகளைப் போலவே, இது நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் கலப்பு செயல்முறையின் அடிப்படையில்  இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இங்கிலாந்து அதிகாரிகள் பலர் பேச்சுவார்த்தைகளுக்காக தில்லிக்கு பயணம் மேற்கொண்டனர். மேலும் பலர் காணொலி வாயிலாக மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர்.

2023 ஆகஸ்ட் 24-25 தேதிகளில் ஜெய்ப்பூரில் ஜி 20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா நடத்தியது. இந்தக் கூட்டத்தில்  இங்கிலாந்து வர்த்தகத் துறை இணையமைச்சர் கெமி படேனோக் இந்தியா வந்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலைச் சந்தித்தார். அவர்கள் இரு நாடுகளுக்குமிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இம்மாதத்தில் (செப்டம்பர்) பதின்மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply