கர்னல் டாக்டர் அலி சைஃப் அலி மெஹ்ராஸி தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடற்படை வானிலை மற்றும் கடலியல் நிபுணர் நான்கு நாள் பயணத்தின் போது இந்திய கடற்படையுடனான தொழில்முறை தொடர்புகள் குறித்து ஆலோசனை நடத்தியதுடன் இந்தியக் கடற்படை கட்டமைப்புகளைப் பார்வையிட்டது.
செப்டம்பர் 1 அன்று புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் (கடற்படை) ஒருங்கிணைந்த தலைமையகத்தில் (ஐ.எச்.க்யூ) இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. அப்போது இரு கடற்படைகளும் வானிலை மற்றும் கடலியல் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பில் திருப்தியை வெளிப்படுத்தின. வானிலை மற்றும் கடலியல் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க ஒப்புக்கொண்டன. கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், அறிவுப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள் மூலம் பரஸ்பர நன்மைகளை அடைய முடியும் என இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
இரு நாட்டு கடற்படைகளின் பரஸ்பர நலன்களை கருத்தில் கொண்டு பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. இந்திய கடற்படை வழங்கிய அன்பான வரவேற்பு மற்றும் சிறந்த விருந்தோம்பலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுக்குழுவின் தலைவர் கர்னல் டாக்டர் அலி சைஃப் அலி மெஹ்ராஸி நன்றி தெரிவித்தார். இந்தியக் கடற்படை உருவாக்கிய அதிநவீன தொழில்நுட்பங்கள், வழிமுறைகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களைக் காண்பதன் மூலம் சிறந்த அனுபவம் கிடைத்த்தாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வல்லுநர் குழு தெரிவித்தது.
எஸ்.சதிஸ் சர்மா