மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந் திட்டத்தின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை நடத்தியது‌ .

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந் திட்டம் (என்.எம்.பி), தொடர்பாக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டி.பி.ஐ.ஐ.டி) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் வாராந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய மண்டல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 31, 2023 அன்று புதுதில்லியில் டிபிஐஐடி-யின் சிறப்பு செயலாளர் (சரக்குப் போக்குவரத்துத் துறை) திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நடைபெற்றது. மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், டாமன் – டையூ மற்றும் தாத்ரா- நகர் ஹவேலி, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.

கூட்டத்தில் பேசிய சிறப்பு செயலாளர் கதிசக்தி எனப்படும் பிரதமரின் விரைவு சக்தி திட்டத்துக்கான இணையதளத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், உள்கட்டமைப்பு மற்றும் சமூகத் துறை திட்டமிடலுக்கு முழுமையான அரசு அணுகுமுறையைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply