சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் அமிர்த கால வளர்ச்சி பயணத்தை வழிநடத்தும்: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் அமிர்த கால வளர்ச்சிப் பயணமான அடுத்த 25 ஆண்டுகளில் சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா எல் 1 இந்தியாவை வழிநடத்திச் செல்லும் முக்கியமான அம்சங்களாக அமைந்துள்ளன என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

உதம்பூர் மாவட்டத்தில் உள்ள திக்ரி -1 பி ஊராட்சியில் என் மண் எனது தேசம் இயக்கத்தை இன்று (03-09-2023) தொடங்கி வைத்துப் பேசிய அவர்,   அமிர்தக் கலச யாத்திரை என்பது, தாய்நாட்டின் செழிப்பில் மக்களின் பங்களிப்பைக் குறிக்கிறது என்று கூறினார்.

இந்தியாவின் சமீபத்திய விண்வெளி அற்புதங்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையால்தான் சாத்தியமானதாகத் தெரிவித்தார். இந்திய விண்வெளித் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த பிரதமர், ‘வானம் எல்லை அல்ல’ என்ற கூற்று இந்தியாவின் விண்வெளித் துறைக்கு பொருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார். 

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று கூறிய அவர் நாசா, ரோஸ்காஸ்மோஸ் போன்றவற்றுக்கு இணையாக இந்தியா தற்போது உள்ளது என்றார். அந்த அமைப்புகள் இப்போது விண்வெளி பயணங்களுக்கு இஸ்ரோவுடன் ஒத்துழைத்து செயல்படுவதாக திரு ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply