“பசுமை கண்டுபிடிப்புகளுக்கு அதிகாரமளித்தல்: தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவைப் பெற்ற ‘ஆலோ இ-செல்’லின் சுற்றுச்சூழலுக்கு உகந்த முதன்மை பேட்டரிகள்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு முயற்சியான ‘மிஷன் லைஃப்’ (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்ற முன்னெடுப்புக்கு  இணக்கமாக, உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒரு புதுமையான ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆலோ இ-செல் பிரைவேட் லிமிடெட் உடனான ஒத்துழைப்பை அறிவிப்பதில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (டி.டி.பி) பெருமிதம் கொள்கிறது. இந்த ஒத்துழைப்பு வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது. நிலையான நடைமுறைகள் மற்றும் உள்நாட்டு படைப்பாற்றலுக்கான பிரதமரின் அழைப்பை தடையின்றி பிரதிபலிக்கிறது.

‘மிஷன் லைஃப்’ என்ற கருத்தாக்கத்தை பிரதிபலிக்கும் புதுமையான தீர்வுகளை ஆதரிக்கும் தனது அர்ப்பணிப்பில் உறுதியோடு திகழும் டி.டி.பி, ஆலோ இ-செல் நிறுவனத்துக்கு தனது உதவியை வழங்குகிறது, ரூ.2.98 கோடி திட்ட மதிப்பீட்டிலான “சுற்றுச்சூழலுக்கு உகந்த -1.5 வி ஏஏ அளவு கற்றாழையை மூலப்பொருளாகக் கொண்ட  பேட்டரிகளின் வணிகமயமாக்கல்.” திட்டத்துக்கு தொழில் மேம்பாட்டு வாரியம் கணிசமான பங்களிப்பான ரூ.1.91 கோடியை மென்மையான கடனாக வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தின் சாத்தியத்தைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்டார்ட்அப்பின் தனித்துவமான அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு உகந்த 1.5 வோல்ட் ஏஏ அளவிலான பேட்டரியை உருவாக்குவதை உள்ளடக்குகிறது. இது கனரக உலோகங்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் நிறைந்த வழக்கமான பயன்பாட்டில்  உள்ள  பேட்டரிகளை  சந்தையில் இருந்து வெளியேற உதவும். கற்றாழையின் உள்ளார்ந்த பண்புகளைப் பயன்படுத்தி,  ஆலோ இ-செல், நிறுவப்பட்ட சந்தை தரங்களின் செயல்திறனுடன் பொருந்துவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பொறுப்பையும் ஆதரிக்கும் ஒரு எலக்ட்ரோலைட்டை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனம் ராஜஸ்தானின் பூண்டியில் முதன்மை பேட்டரிகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான வசதிகளை உருவாக்கும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply