கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். டாக்டர் ப.சுப்பராயன் திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவர் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சி துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்திய தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற எண்ணற்ற பதவிகளை வகித்து, நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கினார்.
எஸ்.திவ்யா