1996 ஆம் ஆண்டு முதல், செப்டம்பர் 8 ஆம் தேதி உலக இயன்முறை மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது 1951 ஆம் ஆண்டில் இத்தொழில் முறை ஏற்படுத்தப்பட்டதை கௌரவிக்கும் வகையில் இத்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நாள் இயன்முறை மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களுடைய விலைமதிப்பற்ற சேவைகளுக்கு மரியாதை செலுத்துகிறது. தனிநபர்கள் உகந்த உடல் செயல்பாட்டை அடைய உதவுதல், அடிப்படை இயக்கம் முதல் சிக்கலான உடல் இயக்க நடவடிக்கைகள் வரை, அவர்கள் நோயாளிகளாக இருந்தாலும் அல்லது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் அவர்களுக்கான பயிற்சி போன்றவற்றை இயன்முறை மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் தேதி, உலக இயன்முறை மருத்துவர்கள் தினம் மூட்டு வலி விழிப்புணர்வில் கவனம் செலுத்துகிறது,
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு பொறுப்பான மைய அதிகாரமாக செயல்படுகிறது. பிசியோதெரபியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இத்துறை 2023 செப்டம்பர் 8 அன்று உலக இயன்முறை மருத்துவர்கள் தினத்தை கடைபிடிக்க உள்ளது. இதற்காக நாடு முழுவதும் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தவுள்ளது.
எம்.பிரபாகரன்