விண்வெளியில் நாட்டின் பெருமையுடன் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் இசைந்துள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் விண்வெளியில் நாட்டின் பெருமையுடன் இசைந்துள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், விண்வெளி மற்றும் அணுசக்தித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

உலகின் மிக உயர்வான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ள நிலையில், ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. முதல் முறையாக நிலவின் தென்துருவத்தில் இந்தியாவின் கொடி பறக்கும் நேரத்திலும், கொவிட் தடுப்பூசிகளில் முன்னோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வெற்றிக் கதை உட்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் சாதனைகள் உலகெங்கிலும் பாராட்டப்பட்டு வரும் நேரத்திலும் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்.

ஜி20 உச்சிமாநாட்டின் கருப்பொருளான ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணர்வுக்கு ஏற்ப “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற பிரதமர் மோடியின் மந்திரத்தை உலகம் இன்று அங்கீகரித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்தார்.

புதுதில்லியில் ஜி20 உச்சிமாநாட்டை முன்னிட்டு தூர்தர்ஷனுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது என்றார். விண்வெளித்துறை உட்பட எந்தவொரு எதிர்கால அறிவியல் முயற்சிக்கும், உலகின் அனைத்துக் கூட்டாண்மை நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply