11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ரூ .2,900 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட்ட 90 பி.ஆர்.ஓ உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ரூ.2,900 கோடிக்கு மேல் மதிப்புள்ள எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ) 90 உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். செப்டம்பர் 12, 2023 அன்று ஜம்முவில் நடந்த ஒரு நிகழ்வில் இந்த திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நெச்சிபு சுரங்கப்பாதை,மேற்கு வங்கத்தில் இரண்டு விமான நிலையங்கள்; இரண்டு ஹெலிபேடுகள்; 22 சாலைகள் மற்றும் 63 பாலங்கள் இதில் அடங்கும். இந்த 90 திட்டங்களில், 36 திட்டங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளன; லடாக்கில் 26; ஜம்மு காஷ்மீரில் 11; மிசோரமில் 5; இமாச்சலப் பிரதேசத்தில் 3; சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு மற்றும் நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தலா ஒன்று ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பி.ஆர்.ஓ இந்த பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் கட்டுமானத்தை சாதனை நேரத்தில் முடித்துள்ளது; அவற்றில் பெரும்பாலானவை அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே வேலை பருவத்தில் முடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது உரையில், பி.ஆர்.ஓவை ஆயுதப்படைகளின் சகோதரர் என்று விவரித்தார், அதன் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம், பி.ஆர்.ஓ இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தொலைதூரப் பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார்.

இந்தத் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டதற்கு அதன் பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவையே காரணம் என்று திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். “பி.ஆர்.ஓவுடன் இணைந்து, நாடு பாதுகாப்பாக இருப்பதையும், எல்லைப் பகுதிகள் மேம்படுத்தப்படுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். தொலைதூரப் பகுதிகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பது இப்போது புதிய இந்தியாவின் புதிய இயல்பாக மாறியுள்ளது, “என்று அவர் கூறினார்.

எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு தேசிய பாதுகாப்புக்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், இந்தியாவுடன் ஒத்துழைப்பு உணர்வுடன் செயல்படும் அண்டை நாட்டுடனான இணைப்பையும் ஊக்குவிக்கிறது என்று திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். மியான்மர் மற்றும் பூட்டான் போன்ற பல நாடுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை பி.ஆர்.ஓ கட்டமைத்துள்ளது மற்றும் அவர்களுடன் அமைதி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவியது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திவாஹர்

Leave a Reply