நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மை மற்றும் நிலையான நடைமுறைகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
2022 அக்டோபரில் நடைபெற்ற சிறப்புத் தூய்மை இயக்கத்தின்போது இந்த அமைச்சகம், 3,023,788 சதுர அடி பரப்பளவை தூய்மைப்படுத்தி, 5,409.5 மெட்ரிக் டன் குப்பைகளை அப்புறப்படுத்தி, 48.5 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது.
பின்தொடர்தல் நடவடிக்கை (ஜனவரி முதல் ஆகஸ்ட் 2023 வரை):
தற்போது நடைபெற்று வரும் தூய்மை இயக்க முன்முயற்சிகளில், 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி அமைச்சகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சாதனைகள் பின்வருமாறு:
· 6,929,401 சதுர அடி இடத்தை சுத்தம் செய்து, 10,266 மெட்ரிக் டன் குப்பைகளை அப்புறப்படுத்தி, 70 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
· ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் (SUP) பயன்பாட்டைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல்,துணிப் பைகளை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
· அமைச்சகத்தின் அனைத்து பிரிவுகளிலும் “தூய்மை இயக்கம் 2023” என்ற முத்திரையுடன் சிறிய மரக்கன்றுகளை வைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.
தற்போதைய முன்முயற்சிகள் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் பொறுப்பான கழிவு மேலாண்மை தொடர்பான பணிகளில் நிலக்கரி அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
எம்.பிரபாகரன்