அரசியலமைப்பு நிறுவனங்களை களங்கப்படுத்தவும், சீர்குலைக்கவும், இழிவுபடுத்தவும், அழிக்கவும் வடிவமைக்கப்பட்ட உத்திகளை” தடுத்து நிறுத்துமாறு குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.

இந்தியாவைப் பற்றி அவ்வப்போது பரப்பப்படும் தீங்கு விளைவிக்கும், தீய கதைகளை” எதிர்கொள்வதில் உலக விவகாரங்களுக்கான இந்தியக் கௌன்சில் (ஐ.சி.டபிள்யூ.ஏ) ஆராய்ச்சி மாணவர்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய விவரிப்புகளின் ஆழமான ஆய்வில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், “நமது அரசியலமைப்பு நிறுவனங்களை களங்கப்படுத்தவும், சீர்குலைக்கவும், இழிவுபடுத்தவும், அழிக்கவும்  வடிவமைக்கப்பட்ட உத்திகளைத் தடுத்து நிறுத்துவதில் உங்கள் பங்கு முக்கியமானது” என்றார்.

வரலாற்றின் வரையறுக்கப்பட்ட தருணத்தில் இந்தியா உள்ளது என்பதை வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், தேசத்தின் சாதனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஆராய்ச்சியாளர்களை வலியுறுத்தினார். இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும், உலகிற்கு செல்லும்  ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இவர்கள் சாளரமாக இருக்கிறார்கள் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

சப்ரு ஹவுஸில் இன்று உலக விவகாரங்களுக்கான இந்தியக் கௌன்சிலின் (ஐ.சி.டபிள்யூ.ஏ) ஆராய்ச்சி மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், ஜி 20 நாடுகளின் தலைவராக இருந்தபோது இந்தியாவின் பங்கு மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் வெற்றி குறித்த பரவலான பாராட்டுகள் பற்றி அவர் குறிப்பிட்டார். “ஜி-20 மாநாட்டில் இந்தியா வெற்றி பெற்றது ஒரு திருப்புமுனை. இது உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்கியது. உலகளாவிய வல்லரசாக மறுமலர்ச்சி பெற்ற இந்தியாவுக்கு நியாயமான அங்கீகாரம் இருந்தது” என்று அவர் கூறினார்.

உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிலையை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், ‘பலவீனமான ஐந்து’ நாடுகளின் ஒரு பகுதியாக இருந்து உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள இந்தியாவின் பயணம் பற்றி  குறிப்பிட்டார். இந்தியாவின்  சில சாதனைகள் ஒரு காலத்தில்  கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உலகிற்குத் தோன்றின.சாதி, மதம், இனம் மற்றும் மொழி எனப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் இது சாத்தியம்  என்று அவர்களால் ஒருபோதும் கற்பனை செய்ய முடிந்திருக்காது  என்று அவர் கூறினார்.

உலக விவகாரங்களுக்கான இந்தியக் கௌன்சிலின் அலுவல்சார் தலைவரான குடியரசு துணைத் தலைவர், சப்ரு ஹவுஸில் இதன் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை இன்று திறந்து வைத்தார். தூதர் விஜய் தாக்கூர் சிங், ஐ.சி.டபிள்யூ.ஏ தலைமை இயக்குநர் திரு சுனில் குமார் குப்தா, குடியரசு துணைத் தலைவரின் செயலாளர் மற்றும்  மூத்த அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply