டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் நடமாடும் மருத்துவனைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் #டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள் அதிகமாக நாடும் ஆரம்ப சுகாதார நிலைங்களில் தேவையான மருந்துகளை இருப்பில் வைத்துக்ககொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் என்பது மழைக்காலங்களில் ஏற்படுவது. ஆனால் தற்பொழுது அதிகமான மழை இல்லாத பொழுதும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு டெங்கு காய்ச்சலில் மக்கள் பாதிக்காமல் இருக்க தேயையான உடனடி ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் நடமாடும் மருத்துவனைகளை ஏற்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ குழுவை அனுப்பி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், குழிகளில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் உபோயகமற்று டயர்கள், மூடப்படாத நீர்தேக்க தொட்டிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களில் தேங்கியுள்ள தண்ணீரில் “ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டு பெருகுகின்றன. இந்த “ஏடிஸ்” கொசுகள் எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவக்கூடியது.

டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்கு பின்புறம் வலி, எலும்பு வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மற்ற சதாரண காய்ச்சல் போன்று தான் இருக்கும். ஆகவே அறிகுறிகள் தெரிந்தவுடன் அரசு மருத்துவரை நோயாளிகள் சந்திந்து உரிய பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழக மருத்துவ குழு தொடர் கண்காணிப்பில் இருந்து டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். நடமாடும் மருத்துவனைகளை கொண்டு அனைத்து இடங்களிலும் உரிய சிகிச்சையையும், மக்களிடையே சரியான விழிப்புணர்வையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகேவாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply