சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 29 வது உலக ஓசோன் தினத்தை கொண்டாடியது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சார்பில்,29வது உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. 1987ஆம்ஆண்டு இந்த நாளில் நடைமுறைக்கு வந்த ஓசோன் சிதைவு பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை படிப்படியாக நிறுத்துவதற்கான சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தமான மான்ட்ரியல் நெறிமுறை கையெழுத்திடப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது. ஓசோன் படலத்தின் சிதைவு குறித்தும், அதை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் ஓசோன் செல் 1995 ஆம் ஆண்டு முதல் தேசிய மற்றும் மாநில அளவில் உலக ஓசோன் தினத்தை கொண்டாடி வருகிறது.

உலக ஓசோன் தினம் 2023 இன் கருப்பொருள் “மான்ட்ரியல் நெறிமுறை: ஓசோன் படலத்தை சரிசெய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல்” என்பதாகும்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  செயலாளர் லீனா நந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மான்ட்ரியல் நெறிமுறையை செயல்படுத்துவதில் இந்தியா சுறுசுறுப்பாக உள்ளது என்பதை வலியுறுத்தினார் மற்றும் அதன் சாதனைகளை எடுத்துரைத்தார்.

ஹைட்ரோபுளோரோகார்பன்களை (எச்.எஃப்.சி) படிப்படியாக ஒழிப்பதற்கான மான்ட்ரியல் நெறிமுறையின் கிகாலி திருத்தத்தை செயல்படுத்துவதற்கு தயாராகி வரும் புதிய முன்முயற்சிகள். அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் அமோக வரவேற்பைப் பெற்றமைக்காக சிறுவர்களை அவர் பாராட்டினார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிற முன்முயற்சிகளான லைஃப் மிஷன் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புகள் குறித்தும் சிறப்பு விருந்தினர் எடுத்துரைத்தார்.

திவாஹர்

Leave a Reply