சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தகவல்தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்), மற்றும் என்.சி.பி.எல் நிறுவனம் ஆகியவற்றின் முன்முயற்சி மற்றும் அறிவுக் கூட்டணியான அறிவு மற்றும் விழிப்புணர்வு மேப்பிங் தளத்தின் (கே.ஏ.எம்.பி) கீழ் பதிவு செய்யப்பட்ட 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 800 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜாம்ஷெட்பூரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆரின் தேசிய உலோகவியல் ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் சுமன் திவாரி, அறிவுப் பகிர்வு குறித்த கருத்தரங்கை நடத்தினார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திரக் கற்றல் (எம்எல்) ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவனத்தையும் பயன்பாட்டையும் பெற்ற, நெருக்கமான தொடர்புடைய இரண்டு துறைகள் என்று டாக்டர் திவாரி விளக்கினார். அவை பல தொழில்நுட்ப முன்னேற்றங்களை உந்தித் தள்ளுகின்றன, மேலும் நம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை மறுவடிவமைக்கின்றன என்றும் கூறினார்.
மேலும் பேசிய டாக்டர் திவாரி, இந்த பிரத்யேக கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறைகளை ஆராய்வோம், அதன் பின்னால் உள்ள மர்மங்களைத் திறப்போம், மேலும் நாம் வேலை செய்யும், வாழும் மற்றும் புதுமைப்படுத்தும் இந்த சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை விவரிப்போம் என்றும் தெரிவித்தார்.
எஸ் சதிஷ் சர்மா