கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற மதிப்புமிக்க தேசிய அளவிலான நிகழ்ச்சிகளில் முதன்மை விருந்தினராக மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று புது தில்லியில் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அதே நாளில், சாத்தியமான பயனாளிகளிடையே பரந்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் எழுபது இடங்களில் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, கர்நாடகா மாநிலம் மங்களூரில் மீன்வளத்துறை, கால்டை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்புமிக்க தேசிய அளவிலான நிகழ்ச்சிகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

கர்நாடக அரசின் மீன்வளம், துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து அமைச்சர், திரு மங்களா எஸ். வைத்யா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திரு பர்ஷோத்தம் ரூபாலா தனது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் பலன்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் குறிப்பாக மீன்பிடித்துறையில் உள்ள நமது பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இத்திட்டம் உதவும் என்றும் அவர் எடுத்துரைத்தார். படகு தயாரிப்பாளர்கள் மற்றும் மீன் வலை தயாரிப்பாளர்கள் இருவரும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். மொத்தம் 13,000 கோடி ரூபாய் செலவில், இந்த முயற்சியானது மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் வெற்றியின் ஏணியில் ஏற உதவும்.

18 பாரம்பரிய வர்த்தகங்களை உள்ளடக்கி, நாடு முழுவதும் உள்ள கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காக, 13,000 கோடி ரூபாய் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது நமது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதால், இது ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது என்று திரு ரூபாலா விளக்கினார். 5% சலுகை வட்டி விகிதத்துடன் ரூ. 1 லட்சம் (முதல் முறை) மற்றும் ரூ. 2 லட்சம் (இரண்டாவது முறை) வரையிலான கடன் உதவி பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு நிதி ரீதியாக வலுவூட்டும். பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுடனும் அவர் உரையாடினார்.

இந்தியப் பொருளாதாரம் பல கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை உள்ளடக்கியது, அவர்கள் தங்கள் திறமையான கரங்கள் மற்றும் பாரம்பரிய கருவிகளைப் பயன்படுத்துகின்றனர், கொல்லர், பொற்கொல்லர், மட்பாண்டம், தச்சு, சிற்பம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தொழில்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இதன் மூலம் பயனடைவர். இந்தத் திறன்கள் அல்லது தொழில்கள் குடும்பங்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் மற்ற முறைசாரா குழுக்களில் இருந்து ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் ‘விஸ்வகர்மாக்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் பொதுவாக சுயதொழில் செய்பவர்கள் மற்றும் பெரும்பாலும் பொருளாதாரத்தின் அமைப்புசாரா துறையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள்.

ஆகஸ்ட் 16, 2023 அன்று, பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் அல்லது ‘விஸ்வகர்மாக்கள்’ தங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு இறுதிவரை ஆதரவளிக்கும் வகையில் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

சாத்தியமான பங்குதாரர்களை சென்றடைவதற்கும் திறமையாக செயல்படுத்துவதற்கும் தகுதியான பயனாளிகள் இத்திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்காக, இத்திட்டத்தின் உள்வாங்கல், மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தேவையான ஆதரவை வழங்குவதில் உறுதியாக உள்ளது.

திவாஹர்

Leave a Reply