குவாஹத்தியில் பிரதமர் விஸ்வகர்மா திட்ட தொடக்க விழாவில் சர்பானந்தா சோனோவால் இணைந்தார்.

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான ‘பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை’ பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா லோகோ, டேக்லைன் மற்றும் போர்ட்டலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள், டூல் கிட் மின் கையேடு மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். 18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இது பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான விஸ்வகர்மாக்களுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். கண்காட்சியை பார்வையிட்டு,  கைவினைஞர்களுடன் கலந்துரையாடிய சிறந்த அனுபவத்தையும் அவர் எடுத்துரைத்தார். பொதுமக்கள் இந்த நிகழ்வை பார்வையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். லட்சக்கணக்கான கைவினைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா திட்டம் ஒரு நம்பிக்கை ஒளியாக வருகிறது என்று பிரதமர் கூறினார்.

குவாஹத்தியில் இருந்து, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் இந்த உன்னத முயற்சியில் பிரதமருடன் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சோனோவால், “பிரதமர் விஸ்வகர்மா யோஜனா என்பது நமது ஆற்றல்மிக்க தலைவர் – பிரதமர் திரு நரேந்திர மோடி  சமூகத்தில் உள்ள அனைவரின் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு மிக முக்கியமானது என்பதற்கான மற்றொரு சான்றாகும். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மோடியின் தொலைநோக்குப் பார்வை பிரதமர் விஸ்வகர்மாவின் எண்ணத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்தத் திட்டம் நமது நாட்டின் விளிம்புநிலைப் பிரிவினர் தேசத்தைக் கட்டமைப்பதில் செயலூக்கமான உறுப்பினர்களாக மாற உதவுவது மட்டுமல்லாமல், உலகின் மிகச் சிறந்தவர்களுடன் போட்டியிடத் தயாராக இருக்கும் புதிய சூழலை உருவாக்கவும் உதவும். இத்திட்டம் நமது கைவினைஞர்களுக்கு அவர்களின் கைவினைக் கலையில் “சிறந்தவர்களாக” மாற அதிகாரமளிக்கும், அதே நேரத்தில் தொகுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பு உலகின் பிற பகுதிகளுடன் போட்டியிட அவர்களுக்கு உதவும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது, அதே நேரத்தில் மரியாதை மற்றும் கண்ணியத்தின் உலகளாவிய நிலையை முன்னெப்போதும் இல்லாத வகையில் கொண்டுள்ளது. பிரதமர் விஸ்வகர்மா திட்டம் மூலம் நமது பாரம்பரிய கைவினைஞர்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியா ஒரு தற்சார்பு நாடாக  மாறுவதை நோக்கி மற்றொரு படி முன்னேறுகிறது’’ என்று கூறினார்.

திவாஹர்

Leave a Reply