எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) முகவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. எல்.ஐ.சி (முகவர்கள்) ஒழுங்குமுறைகள், 2017 திருத்தங்கள், பணிக்கொடை வரம்பு அதிகரிப்பு மற்றும் சீரான குடும்ப ஓய்வூதிய விகிதம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் ஊழியர்களின் கீழ்க்காணும் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

•  எல்.ஐ.சி முகவர்களுக்கான பணிக்கொடை வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. இது எல்.ஐ.சி முகவர்களின் பணி நிலைமை மற்றும் நன்மைகளில் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டுவரும்.

மீண்டும் நியமிக்கப்பட்ட முகவர்களை புதுப்பித்தல்

•  கழிவுத்தொகைக்கு தகுதி பெறச் செய்தல், அதன் மூலம் அவர்களுக்கு அதிகரித்த நிதி ஸ்திரத்தன்மையை வழங்குதல். தற்போது, எல்.ஐ.சி முகவர்கள் பழைய முகைமையின் கீழ் முடிக்கப்பட்ட எந்தவொரு வணிகத்திற்கும் புதுப்பிப்பு  கழிவுத்தொகைக்கு தகுதியற்றவர்கள்.

•   முகவர்களுக்கான குறித்த கால காப்பீட்டுத் திட்டம் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையில் இருந்து ரூ.25,000 முதல் ரூ.1,50,000

வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெர்ம் இன்சூரன்ஸின் இந்த அதிகரிப்பு மூலம் இறந்த முகவர்களின் குடும்பங்களுக்கு கணிசமாக பயனளிக்கும், மேலும் அவர்களுக்கு கணிசமான நலத்திட்ட நன்மைகளை வழங்கும்.

•   எல்.ஐ.சி. ஊழியர்களின் குடும்பங்களின் நலனுக்காக 30% என்ற சீரான விகிதத்தில் குடும்ப ஓய்வூதியம்.

எல்.ஐ.சி.யின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் காப்பீட்டு ஊடுருவலை ஆழப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் இந்த நலத்திட்டங்களால் பயனடைவார்கள்.

திவாஹர்

Leave a Reply