பூமியின் காந்த மண்டலத்தில் ஏற்படும் துணைப்புயல் அல்லது குறைந்த நேர இடையூறுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் காந்தப்புல இருமுனையாக்கம், உள்காந்த மண்டலத்தில் ஆற்றல்மிக்க அயனி ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது எதிர்காலத்தில் விண்வெளி வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்துகிறது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
காந்தக் கோள துணைப்புயல் என்பது, கோள்களுக்கிடையிலான காந்தப்புலத்தின் (ஐ.எம்.எஃப்), சூரிய காற்றின் திசைவேகம், சூரிய காற்று இயக்க அழுத்தம் ஆகியவற்றின் அளவு மற்றும் திசையைப் பொறுத்து ஒரு குறுகிய கால செயல்முறையாகும். இதன் தெற்கு நோக்கிய நகர்வு பகல்நேர காந்த மண்டலத்தில் காந்த மறுஇணைப்பை ஏற்படுத்துவது துணைப்புயல் நிகழ்விற்கு அவசியமான முன்நிபந்தனையாகும். பொதுவாக, துணைப்புயலின் சராசரி காலம் சுமார் 2-4 மணி நேரம் ஆகும். இத்தகைய செயல்பாட்டின் போது, சூரிய காற்றுக்கும் காந்த மண்டலத்திற்கும் இடையிலான இடைவினையிலிருந்து கணிசமான அளவு ஆற்றல் பிரித்தெடுக்கப்படுகிறது. காலப்போக்கில், இந்த ஆற்றல் உள் காந்த மண்டலத்தில் சேமிக்கப்படுகிறது.
ஹீலியம், ஆக்ஸிஜன், புரோட்டான், எலக்ட்ரான் ஆகியவற்றின் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் மின் மற்றும் காந்த புல கருவி தொகுப்பை பயன்படுத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான இந்திய புவிகாந்தவியல் நிறுவனத்தின் (ஐ.ஐ.ஜி) விஞ்ஞானிகள் 2018 காலகட்டத்தில் 22 துணை புயல் நிகழ்வுகளின் புள்ளிவிவர ஆய்வை நடத்தினர்.
திவாஹர்