உள்நாட்டு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 13 மின் ஏலங்களில் 18.09 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மத்திய அரசு விற்பனை செய்துள்ளது.

கோதுமை மற்றும் ஆட்டாவின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்தும் சந்தை தலையீட்டிற்கான மத்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்நாட்டு திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் கோதுமையை வாராந்திர இ-ஏலம் மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2125/- என்ற இருப்பு விலையில் இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) விற்பனை செய்கிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு வாராந்திர ஏலத்திலும் 480-க்கும் அதிகமான கிடங்குகளில் இருந்து 2.00 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், 21.09.2023 வரை மொத்தம் 13 மின்னணு ஏலங்கள் நடத்தப்பட்டு, 18.09 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23-ம் தேதி கோதுமையின் சராசரி விற்பனை விலை ரூ.2254.71 ஆக இருந்தது, இது 20.09.23 தேதியிட்ட மின் ஏலத்தில் குவிண்டாலுக்கு ரூ.2163.47-ஆக குறைந்துள்ளது. கோதுமையின் சராசரி விற்பனை விலை குறைந்து வருவது, வெளிச்சந்தையில் கோதுமையின் சந்தை விலை குறைந்துள்ளதையே காட்டுகிறது.

திவாஹர்

Leave a Reply