குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் உயிர் வேதியியல் துறை “உயிர் வேதியியலின் அம்சங்கள்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை நடத்தியது. பரோடா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) விஜய் குமார் ஸ்ரீவஸ்தவா தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றினார்.
பேராசிரியர் (டாக்டர்)விஜய் குமார் ஸ்ரீவஸ்தவா, புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். கார்பன் உமிழ்வைக் குறைப்பது மற்றும் பிளாஸ்டிக்கை புதுமையான வழிகளில் பயன்படுத்துவது குறித்தும் அவர் விளக்கினார். அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் ஹரிபாய் கட்டாரியா வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளரும், உயிர் வேதியியல் துறைத் தலைவருமான பேராசிரியர் சி.ரத்ன பிரபா, இத்துறையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், கருத்தரங்கின் கருப்பொருள் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்தும் பேசினார்.உயிர் வேதியியல் துறையின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் சி.வி.ஆர் விரிவுரைத் தொடரின் அறிமுக உரையை குஜராத் வி.வி.நகரில் உள்ள சர்தார் படேல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஹரிஷ் பாத் நிகழ்த்தினார்.
தொடக்க அமர்வைத் தொடர்ந்து பல்வேறு முழுமையான அமர்வுகள் நடைபெற்றன. இதில் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.பிரபாகரன்