‘நடராஜர்’ என்பது ஒரு சக்திவாய்ந்த அடையாளமாகும், இது சிவபெருமானை ஒரே உருவத்தில் இணைத்து, பிரபஞ்சத்தை படைப்பவராகவும், பாதுகாப்பவராகவும், அழிப்பவராகவும், காலத்தின் இயக்க சுழற்சியைப் பற்றிய பாரதிய புரிதலை வெளிப்படுத்துகிறது. நடராஜர் சிற்பம் ஒரு நவீன அற்புதம் என்றும், கலை சிறப்பின் நீடித்த சின்னம் என்றும் விமர்சகர்கள் பாராட்டியதால், கலை உலகின் பேசுபொருளாக மாறியது. ஸ்தபதியின் படைப்பைக் காண உலகெங்கிலும் இருந்து பிரதிநிதிகள் திரண்டனர், இந்தப் புகழ்பெற்ற கலைப் படைப்பிலிருந்து வெளிப்படும் அழகையும் தெய்வீக ஆற்றலையும் அனுபவிக்க ஆர்வமாக இருந்தனர். ஜி-20 மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில் நடராஜர் சிலையை நிறுவுவதில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முக்கியப் பங்கு வகித்தது. இளைய தலைமுறையினருக்கு ‘நடராஜர்’ பற்றிய அறிவைப் பரப்பவும், விவாதிக்கவும், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் “நடராஜர்: பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடு” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கண்கவர் தலைசிறந்த படைப்பான நடராஜர் சிலையை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
கருத்தரங்கில் பத்ம பூஷண் டாக்டர் பத்ம சுப்பிரமணியம், பத்ம விபூஷண் டாக்டர் சோனல் மான்சிங் (எம்.பி., மாநிலங்களவை), ஐ.ஜி.என்.சி.ஏ அறக்கட்டளையின் தலைவர் திரு ராம்பகதூர் ராய், மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோபிந்த் மோகன், ஏ.ஐ.எஃப்.ஏ.சி.எஸ் தலைவர் திரு பிமன் பிஹாரி தாஸ், கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சஞ்சீவ் குமார் சர்மா, நடராஜர் சிலையை உருவாக்கிய திரு ராதா கிருஷ்ணா ஸ்தபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பேச்சாளர்களாக இருந்தனர். என்.ஜி.எம்.ஏ., முன்னாள் தலைமை இயக்குனர் அத்வைதா கட்நாயக், சிற்பி அனில் சுதர், ஐ.ஜி.என்.சி.ஏ. , உறுப்பினர் செயலர் டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி உட்பட, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
விழாவில் பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் நடராஜர் கருத்து குறித்து விரிவாக பேசினார். பிரக்ஞையின் வெளியைப் பற்றிப் பேசினார். அறிவியல் ரீதியாக இது பருப்பொருளும் ஆற்றலும் கலந்தது. சிதம்பரத்தில் உள்ள ‘நடராஜர்’ சந்நிதியில் அமைந்துள்ள ‘ரூப’ வழிபாடு (உருவ வழிபாடு) மற்றும் ‘அருப’ வழிபாடு (உருவமற்ற வெளி வழிபாடு) ஆகியவற்றின் கலவையாகும். அவர் தனது விளக்கக்காட்சியில், ‘நடராஜரின்’ பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் அவர் வழங்கிய அறிவால் ஞானம் பெற்றனர்.
புதிய ஐ.டி.பி.ஓ கன்வென்ஷன் சென்டரில் நடராஜர் சிலை நிறுவப்படுவதைக் குறிப்பிட்டு “நடராஜர்: பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடு” என்ற தலைப்பில் நுட்பமாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்பது ஒரு பாக்கியம் என்று டாக்டர் சோனல் மான்சிங் கூறினார். பாரதிய விழுமியங்கள், அறிவு மற்றும் நமது வளமான கலாச்சார பாரம்பரியம் குறித்த சரியான தகவல்களை வளர்ப்பதற்காக, இந்த அறிவூட்டும் நிகழ்வை நடத்தியதற்காக இந்திரா காந்தி தேசிய கலை மையத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய கலாச்சார அமைச்சகத்தின் திரு கோவிந்த் மோகன், ‘நடராஜர்’ உருவாக்கம் தொடர்பான தனது குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார், மேலும் முழு செயல்முறையும் சவாலானது என்றாலும், ‘நடராஜர்’ தான் இந்த மகத்தான பணியை முடிப்பதில் உத்வேகம் அளித்தார் என்று கூறினார். இதன் உருவாக்கம் பாரம்பரிய முறையில் செய்யப்பட வேண்டும் என்றும், எனவே உலகின் மிக உயரமான ‘நடராஜர்’ சிலையை தமிழ்நாட்டின் சுவாமி மலையைச் சேரந்த ஸ்தபதி ராதா கிருஷ்ணர் மற்றும் அவரது குழுவினர் சிற்ப சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அளவீடுகளைப் பயன்படுத்தி, கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல், சோழர் காலத்திலிருந்து நடராஜர் தயாரிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய மெழுகு வார்ப்பு செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கினர் என்று கூறினார். ம் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி, நடராஜர் எவ்வாறு சிவனின் பிரதிநிதியாகவும் பிரபஞ்ச சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார் என்பதை விளக்கினார். ‘தாண்டவ முத்திரை’ என்பது படைப்பாற்றல், காத்தல் மற்றும் அழிவு ஆகியவற்றின் பிரபஞ்ச சுழற்சியாகும். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியம் சாதனை நேரத்தில் முடிந்துவிட்டது என்று கூறி முடித்தார். உலக அளவில் புகழ்பெற்ற தமிழகத்தின் சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பி திரு ராதா கிருஷ்ண ஸ்தபதி தனது தனித்துவமான கலைத்திறனுக்காக கௌரவிக்கப்பட்டார், அவரது தலைசிறந்த படைப்பு உலகெங்கிலும் உள்ள கலை ஆர்வலர்களை கவர்ந்தது. சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டை சிறப்பித்த ‘நடராஜர்’ சிலையை உருவாக்கியதற்காக அவருக்கு இந்த பெருமைக்குரிய கவுரவம் கிடைத்துள்ளது. சுமார் 18 டன் எடை கொண்ட 27 அடி நடராஜர் சிலையை சுவாமிமலையின் பாரம்பரிய ஸ்தபதிகள் பாரம்பரிய மெழுகு வார்ப்பு முறையில் சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி அளவீடுகள் மற்றும் அளவீடுகளைப் பின்பற்றி வடிவமைத்துள்ளனர். சுவாமிமலை வழியாகச் செல்லும் காவிரி ஆற்றின் ஒரு பகுதியில் சிலை செய்யப் பயன்படும் களிமண் கிடைக்கிறது.
ஒற்றுமை, வலிமை மற்றும் கருணையின் சாராம்சத்தை தங்கள் கலைப்படைப்புகள் மூலம் சித்தரிக்கக்கூடிய ஒரு கலைஞரை ஜி 20 உச்சி மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தேடினர். ஸ்தபதியின் பெயர் கலைச் சமூகத்தில் எதிரொலித்தது, இந்த மகத்தான பணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தின் நுணுக்கமான விவரங்களை ஸ்தபதி பல மாதங்களாக நுணுக்கமாக ஆராய்ந்து, நடராஜரின் ஆன்மாவை தனது சிற்பத்தில் உள்வாங்க முயன்றார். ஜி-20 மாநாட்டில் நடராஜரின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
எஸ்.சதிஸ் சர்மா