தூத்துக்குடி அல்காலி ரசாயனம் மற்றும் உர நிறுவனத்திற்காக எகிப்தின் டாமிட்டா துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 37.4 டன் எடையுள்ள 3×20 ஐ.எஸ்.ஓ கிரீன் அம்மோனியா பெட்டகங்களை 2023, செப்டம்பர் 23 அன்று தமிழ்நாடு வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெற்றிகரமாக கையாண்டது.
பாரம்பரியமாக, சாம்பல் அமோனியா சோடா சாம்பல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. கோ கிரீன் முன்முயற்சியாக, தூத்துக்குடி அல்காலி ரசாயனம் மற்றும் உர நிறுவனம் சோதனை அடிப்படையில் பசுமைச் சோடா சாம்பல் தயாரிக்க பசுமை அம்மோனியாவை இறக்குமதி செய்துள்ளது. மேலும், பசுமை அம்மோனியா கிடைப்பதற்கு உட்பட்டு இந்த ஆண்டு 2000 மெட்ரிக் டன் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
24.09.2023 அன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே நாளில் 2,01,204 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக 26.08.2023 அன்று 2,00,642 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டிருந்தது.
பெட்டகங்கள் (1,03,528), அனல் நிலக்கரி (35,018), தொழில்துறை நிலக்கரி (27,233), சுண்ணாம்புக்கல் (12,868), கந்தக அமிலம் (10,930) மற்றும் பிற (11,627) ஆகியவை இந்த சாதனைக்கு பங்களித்த முக்கிய சரக்குகளாகும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு.பிமல் குமார் ஜா, “பசுமைத் துறைமுக முயற்சிகளை மேற்கொள்வதில் நாட்டின் முக்கிய துறைமுகங்களில் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. எங்களுடைய துறைமுக வணிக கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் கார்பன் தடத்தை குறைக்க பசுமை தயாரிப்புகளைப் பயன்படுத்த பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சிறப்பான தருணத்தில் தூத்துக்குடி அல்காலி ரசாயனம் மற்றும் உர நிறுவனத்தின் பசுமை முன்முயற்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு , அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துவதாக குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்