நாட்டின் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சியில், இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் 72 இடங்களில் ‘சமூக வலுவூட்டல் முகாம்களை நடத்தியது.
பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒவ்வொரு முகாம் இடத்திலும் ஒலிபரப்பப்பட்டதன் மூலம் இந்த நிகழ்வு தொடங்கியது, இது நீண்ட காலமாக தேசத்திற்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது, இது இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மாறுபட்ட குரல்கள் மற்றும் கண்ணோட்டங்களை ஒருங்கிணைக்கிறது. பின்னர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மத்தியப் பிரதேசத்தின் திகாம்கரில் முக்கிய நிகழ்வைத் தொடங்கி வைத்தார், இது 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு இடங்களுடன் ஆன்லைனில் இணைக்கும் விழாவின் மையப் புள்ளியாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், பிரதமரின் “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ்” என்ற மந்திரத்தை பின்பற்றி, மூத்த குடிமக்களின் சமூக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான பல்வேறு மையப்படுத்தப்பட்ட திட்டங்களை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான உயர்தர உதவிகள் மற்றும் உதவி சாதனங்களைத் தயாரிக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அமைச்சகம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்று கூறிய மத்திய அமைச்சர், துறை இப்போது செயற்கை உறுப்புகள் தயாரிப்பதற்கான 3 டி ஸ்கேனிங் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த புதிய முயற்சியால் பயனடைந்த முதல் மாவட்டம் திகாம்கர் என்றும் கூறினார்.
இம்முகாமில் மத்திய அரசின் தேசிய வயோதிகர்கள் திட்டத்தின் கீழ் 12,814 மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த முகாம்களை ஏற்பாடு செய்வதன் நோக்கம் நாடு முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்கான கண்ணோட்டத்தை உருவாக்குவதும், மூத்த குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதும் ஆகும். ஆரோக்கியமாக, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ அவர்களை அனுமதிப்பதே இதன் நோக்கம். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, இந்திய செயற்கை கால்கள் உற்பத்திக் கழகத்துடன் (அலிம்கோ) இணைந்து இந்த விநியோக முகாம்களை நடத்துகிறது.
ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் தொடர் விநியோக முகாம்களில். திரிபுராவின் தலாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் குமாரி பிரதிமா பௌமிக் கலந்து கொண்டார். இந்த விநியோக முகாம்கள் அனைத்தும் திகாம்கரில் உள்ள முக்கிய நிகழ்ச்சி நடைபெறும் இடத்துடன் ஆன்லைனில் இணைக்கப்பட்டன.
கால் பராமரிப்பு பிரிவுகள், முதுகெலும்பு ஆதரவு, கமோட் கொண்ட சக்கர நாற்காலிகள், கண்ணாடிகள், பற்கள், சிலிகான் மெத்தைகள், எல்.எஸ் பெல்ட்கள், ட்ரைபாட்கள், முழங்கால் பிரேஸ்கள் மற்றும் நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான உதவி சாதனங்கள் வழங்கப்பட்டன. இந்த உதவி சாதனங்கள் பயனாளிகளை தன்னிறைவு அடையச் செய்வதையும், சமூகத்தின் நீரோட்டத்தில் ஒருங்கிணைக்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
திவாஹர்