2023 அக்டோபர் 1 அன்று தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக “ஒன்றாம் தேதி, ஒருமணி நேரம், ஒன்றுசேர்ந்து ” என்பதில் தீவிரமாகப் பங்கேற்க உணவு மற்றும் பொது விநியோகத் துறை திட்டமிட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், நாடு முழுவதும் மொத்தம் 811 நிகழ்வுகளை அடையாளம் கண்டு பங்கேற்கின்றன.
செயலாளர் திரு. சஞ்சீவ் சோப்ராவின் தலைமையில், புதுதில்லி, லோதி காலனியில் உள்ள மெஹர்சந்த் சந்தை, அறியப்படாத ராணுவ வீரர்கள் பகுதி ஆகியவற்றில் தூய்மைப் பணிகளை இத்துறை மேற்கொள்ளும். இந்த மெகா நிகழ்வில் மெஹர் சந்த் சந்தை சங்கத்தின் உறுப்பினர்களும் இணைவார்கள்.
இதேபோல், இந்திய உணவுக் கழகம் மற்றும் மத்திய சேமிப்புக் கிடங்கு கழகங்களின் தலைமையகம், துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெங்காலி சந்தை மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் புதுதில்லியில் உள்ள மயூர் விஹார், கட்டம் -1, பி.கே.டி -2-ன் அருகிலுள்ள பள்ளியில் இந்த இயக்கத்தை மேற்கொள்வார்கள்.
இத்துறை மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்கள் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 811 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 13,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்தத் தூய்மைப் பணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இயக்கத்தின் கீழ் உள்ள அனைத்து செயல்பாடுகளும் சீராக மேற்கொள்ளப்படுவதையும், நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதையும் உறுதி செய்வதற்காக, இணைச் செயலாளர் நிலையிலான ஒருங்கிணைப்பு அதிகாரியை இத்துறை நியமித்துள்ளது.
திவாஹர்