தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகள் இந்த வளர்ச்சித் திட்டங்களில் அடங்கும். நிகழ்ச்சியின் போது, காணொலி மூலம் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பண்டிகை காலத்தின் வருகையை சுட்டிக் காட்டினார், மேலும் நாடாளுமன்றத்தில் நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேற்றப்பட்டது நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு சக்தி பூஜையின் உணர்வை நிறுவியுள்ளது என்றார். 

பிராந்தியத்தின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பல சாலை இணைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுவதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். நாக்பூர் – விஜயவாடா பொருளாதார வழித்தடம் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் போக்குவரத்து மற்றும் வணிகத்தை எளிதாக்கும். இந்த மாநிலங்களில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்துறைக்கு ஊக்கம் அளிக்கிறது. 8 சிறப்பு பொருளாதார மண்டலம், 5 மெகா உணவு பூங்காக்கள், 4 மீன்பிடி கடல் உணவு தொகுப்புகள், 3 மருந்து மற்றும் மருத்துவ குழுமங்கள் மற்றும் 1 ஜவுளி கிளஸ்டர் உள்ளிட்ட முக்கிய பொருளாதார மையங்கள் இந்த வழித்தடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இது ஹனம்கொண்டா, மகபூபாபாத், வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல வழிகளைத் திறக்கும்.

திவாஹர்

Leave a Reply