டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு.

டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் திரு ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் இன்று (அக்டோபர் 3, 2023) குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவரின் முதல் இந்திய வருகையை வரவேற்ற குடியரசுத்தலைவர் , இந்தியாவும் டொமினிக்கன் குடியரசும் தங்கள் ராஜ்ஜிய உறவுகளின் 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால் இந்தப் பயணத்தின் தருணம் மிகவும் பொருத்தமானது என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நட்புரீதியானது. ஜனநாயகத்தின் பகிரப்பட்ட மதிப்புகளின் வலுவான அடித்தளம் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்த கருத்துகளின் பரந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் குறிப்பிட்டார்.

லத்தீன் அமெரிக்காவில் டொமினிக்கன் குடியரசு இந்தியாவின் 8வது பெரிய வர்த்தக கூட்டாளி என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், வர்த்தக ஒத்துழைப்பை மேலும் பன்முகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், டொமினிக்கன் குடியரசுக்கும் இடையிலான தொடர்ச்சியான பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகள் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply