மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கொள்ளையடிக்கப்பட்ட மீனவர்களின் பொருட்களை மீட்டுத் தர வேண்டும்!-ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

நாகப்பட்டிணம் மாவட்டம், கோடியக்கரை அருகில் உள்ள வேதாரண்யம் பகுதியை சேந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்த பொழுது, இலங்கை கடற்கொள்ளையர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, விலையுயர்ந்த பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி விலையுயர்ந்த ஜிபிஎஸ் கருவி, மீன்பிடி வலை, செல் போன்கள் போன்றவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்களின் தாக்குதலை மட்டும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணது போல் உள்ளதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

மத்திய, மாநில அரசுகள் இலங்கை கடற்கொள்ளையரின் அத்துமீறலுக்கு நிரத்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கை அரசுடன் பேசி விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட மீனவர்களின் பொருட்களை மீட்டுத் தர வேண்டும். இந்திய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சமில்லாமல் மீன்பிடிக்கும் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply