இந்திய கடற்படை தனது வருடாந்திர கல்வி அதிகாரிகள் செறிவூட்டல் திட்டம் 2023 ஐ புதுதில்லியில் அக்டோபர் 05 மற்றும் 06 ஆம் தேதிகளில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை அகாடமியின் முதன்மை அதிகாரி ரியர் .அட்மிரல் ராஜ்வீர் சிங், கமாடோர் ஜி.ராம்பாபு, மாடோர் (கடற்படை கல்வி) மற்றும் இந்திய கடற்படையின் கல்வி பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். பல்வேறு கொள்கை முன்முயற்சிகள் தொடர்பான சமகால பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதும், இந்திய கடற்படையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அதன் செயல்பாட்டு செயல்திறனை மேலும் மேம்படுத்துவதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் (என்.ஐ.இ.பி.ஏ) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) ஆகியவற்றின் சிறப்பு அழைப்பு பேச்சாளர்கள் உயர்கல்வி உள்ளிட்ட கல்வித் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விரிவுரையாற்றினர். மேலும், பிற கல்வி நிறுவனங்கள் மற்றும் கடற்படை தலைமையகத்தில் உள்ள பிற இயக்ககங்களைச் சேர்ந்த பேச்சாளர்கள் பொருத்தமான மற்றும் சமகால தலைப்புகளில் விரிவுரையாற்றினர். நிறைவுரையாற்றிய பணியாளர் மற்றும் பணியாளர் சேவை கட்டுப்பாட்டாளர் தலைவர் திரு வி.ஏ.கே.சுவாமிநாதன், கடற்படை கல்வி இயக்குநரகத்தின் சமீபத்திய முயற்சிகள் மற்றும் கடற்படை வீரர்களின் கல்வி, பயிற்சி மற்றும் நலனில் இப்பிரிவின் பங்கு பற்றி பேசினார். இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் பங்கிற்கு ஏற்ப இப்பிரிவை வடிவமைப்பதில் பயனுள்ள தலைமையைத் தொடர்ந்து வழங்குமாறு பிரதிநிதிகளை அவர் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்