நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறை (டி.ஏ.ஆர்.பி.ஜி) செப்டம்பர் 2023-க்கான மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சி.பி.ஜி.ஆர்.எம்.எஸ்) குறித்த தனது 17வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின்சாதனைகள்:
- பொது மக்களிடமிருந்து செப்டம்பர் மாதத்தில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கு அதிகபட்சமாக 11,198 மனுக்கள் வந்துள்ளன.
- செப்டம்பர் மாதத்தில் 500- க்கும் அதிகமான மனுக்களுடன் குறை தீர்க்கும் மதிப்பீடு மற்றும் குறியீட்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை முதலிடம் வகிக்கிறது.
- நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறை (சி.பி.ஜி.ஆர்.எம்.எஸ்) பொதுச் சேவை மையத்துடன் (சி.எஸ்.சி) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, மேலும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை 2023 செப்டம்பர் மாதத்தில் 5167 புகார்களைப் பெற்றுள்ளது.
- செப்டம்பர் மாதத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை பெற்ற புகார்களில் 46.14% பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதாவது 11198 மனுக்களில் 5167 புகார் மனுக்கள் பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 387 புகார்களுடன் செப்டம்பர் மாதத்தில் முன்வைக்கப்பட்டு, 11198 புதிய புகார்கள் பெறப்பட்டன., ஏற்கனவே இருந்த மொத்தம் 11585 புகார்களில் 8830 தீர்வு காணப்பட்டு, 2755 புகார்கள் நிலுவையில் உள்ளன.
எஸ்.சதிஸ் சர்மா