பாசுமதி அரிசிக்கான பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழை அபெடா மூலம் வழங்குவதற்கான எஃப்ஓபி மதிப்பை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அரிசியின் உள்நாட்டு விலைகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வோருக்கு போதுமான அளவு அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1200 அமெரிக்க டாலர் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழ் (ஆர்.சி.ஏ.சி) வழங்குவதற்காக பதிவுசெய்யலாம். இது 25 ஆகஸ்ட் 2023 முதல் நடைமுறையில் உள்ளது.  பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் தவறான வகைப்படுத்தல் மற்றும் சட்டவிரோத ஏற்றுமதி தொடர்பாக அரசுக்கு நம்பகமான கள அறிக்கைகள் கிடைத்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அவற்றின் ஏற்றுமதி 20 ஜூலை 2023 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி பாசுமதி அரிசியின் எச்எஸ் குறியீட்டின் கீழ் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

தற்போது, பாசுமதியின் புதிய வரத்துகள் வரத் தொடங்கியுள்ளன. பொதுவாக வரத்துகள் அதிகரிக்கத் தொடங்கும் போது விலைகளில் சரிவு ஏற்படுகிறது.  அதிக எஃப்ஓபி (Free on Board FOB) மதிப்பு நாட்டிலிருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதியை மோசமாக பாதிக்கிறது என்று அரிசி ஏற்றுமதியாளர் சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர், பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்காக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள்  ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (அபெடா – APEDA) ஆர்சிஏசி எனப்படும் பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழை வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் எஃப்ஓபி மதிப்பை மறுஆய்வு செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அரசு உரிய முடிவு எடுக்கும் வரை தற்போதைய நிலை தொடரும்.

திவாஹர்

Leave a Reply