அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்று வரும் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0-ன் ஒருபகுதியாக, மத்திய சுற்றுச்சூழல், அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் ஈரநில நிலங்கள் தொடர்பான அதிகாரிகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு அமிர்த நீர்நிலைப்பகுதிகளில் ஈரநிலங்களை தூய்மை செய்ய ஏற்பாடு செய்தது.
ஈரநிலங்களை தூய்மையாக பராமரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ‘ஈரநிலங்களை காப்போம்’ இயக்கத்தின் கீழ் நாடு தழுவிய இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
உலக ஈரநிலங்கள் தினத்தை முன்னிட்டு 2023, பிப்ரவரி 2, அன்று ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான முழுமையான சமூக அணுகுமுறையாக ஈரநிலங்களை காப்போம் என்ற இயக்கத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.
எம்.பிரபாகரன்