எஃகு அமைச்சகத்தின் செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா மற்றும் எஃகு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அபிஜித் நரேந்திரா ஆகியோர் நேற்று (17.10.2023) தில்லியில் உள்ள தேசிய கனிமங்கள் மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எம்.டி.சி) பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று சிறப்பு இயக்கம் 3.0-ன் ஒரு பகுதியாக இந்நிறுவனம் மேற்கொண்ட தூய்மை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் தூய்மைக்கான என்.எம்.டி.சியின் அர்ப்பணிப்புக்கு இந்த ஆய்வின் போது திரு நாகேந்திர நாத் சின்ஹா, பாராட்டு தெரிவித்தார். தூய்மையான மற்றும் நிலையான இந்தியாவுக்கு பங்களிப்பதில் இதுபோன்ற முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
தூய்மையான மற்றும் பசுமையான சூழலுக்கான தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைவதில் என்.எம்.டி.சியின் முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து எஃகுத்துறை இணைச் செயலாளர் திரு அபிஜித் நரேந்திரா எடுத்துரைத்தார்.
எம்.பிரபாகரன்