இந்திய இராணுவம் மற்றும் இந்திய யுஎஸ்ஐ ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘புராஜெக்ட் உத்பாவ்’ திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் .

பாதுகாப்பு அமைச்சர் . ராஜ்நாத் சிங், இந்திய இராணுவ பாரம்பரிய விழாவைத் தொடக்கி வைத்தபோது, இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.ஜே.சிங், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ ஆகியோர் முன்னிலையில், ‘புராஜெக்ட் உத்பாவ்’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

வியூகத்துக்கான ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் ஐச், மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்க்குக்கு  நன்றி தெரிவித்து, ‘புராஜெக்ட் உத்பாவ் ‘ முக்கியத்துவம் குறித்து கூட்டத்தில் விளக்கினார். இந்திய இராணுவம் மற்றும் யு.எஸ்.ஐ.க்கு இடையிலான ஒத்துழைப்பான ‘புராஜெக்ட் உத்பாவ் ‘, இந்தியாவின் பண்டைய இராணுவ சிந்தனைகளின் வேர்களை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு முயற்சியாகும் என்று அவர் எடுத்துரைத்தார்.

‘தோற்றம்’ அல்லது ‘தொடக்கம்’ என்று மொழிபெயர்க்கப்படும் ‘உத்பவ்’ நமது தேசத்தின் பழங்கால வேதங்கள் மற்றும் எழுத்துக்களை அங்கீகரிக்கிறது, அவை கடந்த நூற்றாண்டுகளில் நீண்டுள்ளன. நவீன இராணுவ உத்திகளுக்கு பயனளிக்கும் ஆழமான அறிவைக் கொண்டுள்ளன.

பண்டைய அறிவை சமகால இராணுவ நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதும், நவீன பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒரு தனித்துவமான மற்றும் முழுமையான அணுகுமுறையை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இது இந்திய இராணுவத்தின் தொலைநோக்கு முயற்சியாகும், இது பழங்கால அறிவை சமகால இராணுவ கற்பித்தலுடன் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது.

சாணக்கியரின் அரசாட்சி மற்றும் போர் பற்றிய போதனைகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. அதுபோலவே, தமிழ் மெய்யியலாளரான திருவள்ளுவரால் இயற்றப்பட்ட செம்மொழித் தமிழ் நூலான திருக்குறளின் ஞானம், போர் உள்பட அனைத்து முயற்சிகளிலும் நன்னெறி நடத்தையை வலியுறுத்துகிறது. இது நீதியான போரின் நவீன இராணுவ நெறிமுறைகள் மற்றும் ஜெனீவா உடன்படிக்கையின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது.

பண்டைய நூல்களைத் தவிர, முக்கிய இராணுவப் படையெடுப்புகள் மற்றும் தலைவர்கள் பற்றிய ஆய்வும் முக்கியமானது. சந்திரகுப்த மௌரியர், அசோகர் மற்றும் சோழர்களின் பேரரசுகள் அவர்களின் காலத்தில் செழித்து விரிவடைந்தன. முகலாயர்களைத் தோற்கடித்து 600 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்த அஹோம் இராச்சியத்தின் எடுத்துக்காட்டுகளும் உள்ளன.

பண்டைய அறிவு முறையால் விளக்கப்பட்ட கோட்பாடுகள், சத்ரபதி சிவாஜி மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங் ஆகியோரால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன, அவை எண்ணிக்கையில் உயர்ந்த முகலாய மற்றும் ஆப்கானிய படையெடுப்பாளர்களை தோற்கடித்தன. சிவாஜி கொரில்லா தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியது நன்கு அங்கீகரிக்கப்பட்டாலும், வெளிப்புற அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக மேற்கத்திய கடற்பரப்பில் தொடர்ச்சியான கடற்படை கோட்டைகளைக் கட்டுவதில் அவரது தொலைநோக்குப் பார்வை குறைவாகவே முன்னிலைப்படுத்தப்படுகிறது.

‘புராஜெக்ட் உத்பாவ்’ தொடங்கப்பட்டதன் மூலம், இந்திய இராணுவம் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது, இது நமது வளமான மற்றும் யுத்திகள் கடந்த காலத்தால் நமது இராணுவ வலிமை மற்றும் மூலோபாய சிந்தனையை மேம்படுத்தும் எதிர்காலத்தை வளர்ப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply