இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான இந்தியன் பனோரமா 25 திரைப்படங்கள் மற்றும் 20 கதையம்சமற்ற திரைப்படங்கள் தேர்வை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் 2023 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
இந்தியன் பனோரமாவை நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற நபர்கள் தேர்வு செய்கிறார்கள், இதில் திரைப்படங்களுக்கான மொத்தம் பன்னிரண்டு நடுவர் குழு உறுப்பினர்களும், கதையம்சமற்ற திரைப்படங்களுக்கான ஆறு நடுவர் குழு உறுப்பினர்களும் உள்ளனர்.
பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட திரைப்பட நடுவர் குழுவுக்கு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர், தலைவர் திரு டி.எஸ்.நாகபரணாதலைமை தாங்கினார். பல்வேறு பிரபல திரைப்படங்கள் மற்றும் திரைப்படம் தொடர்பான தொழில்களை தனித்தனியாக பிரதிநிதித்துவப்படுத்தும் அதே நேரத்தில், பன்முகத்தன்மை கொண்ட இந்திய சகோதரத்துவத்தை கூட்டாக பிரதிநிதித்துவப்படுத்தும் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டு நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது:
- திரு. ஏ. கார்த்திக் ராஜா; ஒளிப்பதிவாளர்
- திரு. அஞ்சன் போஸ்; திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
- திருமதி டாக்டர் இதிராணி சமந்தா; திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர்
- திரு. கே.பி.வியாசன்; திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் கதையாசிரியர்
- திரு. கமலேஷ் மிஸ்ரா; திரைப்பட இயக்குனர் மற்றும் கதை ஆசிரியர்
- திரு. கிரண் காந்தி; திரைப்பட தொகுப்பாளர் மற்றும் இயக்குனர்
- திரு. மிலிந்த் லெலே; திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
- திரு. பிரதீப் குர்பா; திரைப்பட இயக்குனர்
- திருமதி ராம விஜ்; நடிகன்
- திரு. ரோமி மெய்ட்டி; திரைப்பட இயக்குனர்
- திரு. சஞ்சய் ஜாதவ்; திரைப்பட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்
- திரு. விஜய் பாண்டே; திரைப்பட இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
54 வது இந்திய சர்வதேச விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 408 சமகால இந்திய திரைப்படங்களிலிருந்து 25 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பின்வரும் திரைப்படங்களின் தொகுப்பு இந்தியத் திரைப்படத் துறையின் உயிரோட்டத்தையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது.
இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய தமிழ்த்திரைப்படமான காதல் என்பது பொதுவுடமை. இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கிய தமிழ்த்திரைப்படமான நீலநிற சூரியன், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம்-1 உள்ளிட்ட 25 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பிரதான சினிமாப்பிரிவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தமிழ்த்திரைப்படமான பொன்னியன் செல்வன் பாகம்-2 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பனோரமா 2023 இன் தொடக்க திரைப்படத்திற்கான நடுவர் குழுவின் தேர்வு திரு ஆனந்த் எகர்ஷி இயக்கிய ஆட்டம், (மலையாளம்) திரைப்படமாகும்.
54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 239 சமகால இந்திய கதையம்சமற்ற திரைப்படங்களில் 20 திரைப்படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
இதில் இயக்குநர் பிரவீன் செல்வம் இயக்கிய தமிழ்த்திரைப்படமான நன்செய் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கதையம்சமற்ற திரைப்பட வரிசையில் மணிப்பூரி திரைப்படமான ஆண்ட்ரோ ட்ரீம்ஸ் தொடக்க படமாக திரையிடப்பட உள்ளது.
எம்.பிரபாகரன்