மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் மற்றும் ஹரியானா முதல்வர் ஸ்ரீ மனோகர் லால் கட்டார் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஹரியானாவின் ரோஹ்தக்கில் PM Shri பள்ளிகளுக்கான ICT ஆய்வகங்களைத் திறந்து வைக்கிறார்கள்.
ஹரியானா பள்ளிக் கல்வி அமைச்சர் ஸ்ரீ கன்வர் பால், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார், மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் மற்றும் பிரபல கல்வியாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
தொடக்கக் குறிப்புகள் மற்றும் வரவேற்பு உரையை ஸ்ரீ சஞ்சய் குமார் வழங்குவார், அதைத் தொடர்ந்து PM ஸ்ரீ பள்ளிகள் பற்றிய விளக்கக்காட்சியும் நடைபெறும். நிகழ்வின் பிற்பகுதியில், ஸ்ரீ தர்மேந்திர பிரதான் மற்றும் மனோகர் லால் கட்டார் ஆகியோர் PM ஸ்ரீ பள்ளிகளுக்கான ICT ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளைத் திறந்து வைப்பார்கள்.
இவை தவிர, பள்ளிகள் செயலி மற்றும் மொபைல் அப்ளிகேஷன் (NIPUN) ஆகியவற்றின் அங்கீகாரத்தையும் அமைச்சர்கள் தொடங்குவார்கள். இந்த நிகழ்வின் போது பால்வதிகா-3க்கான புத்தகங்கள் மற்றும் கற்றல் பொருட்கள் வெளியிடப்படும்.
திவாஹர்