தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் உதவியுடன், அகர்தலா, ஆக்ரா, அவுரங்காபாத், பாவ்நகர், போபால், குவஹாத்தி-போங்கைகான், ஹிசார், ஜெய்ப்பூர், ஓங்கோல், பாலக்காடு, ராஞ்சி-கும்லா, சங்காரெட்டி, திருச்சி, ஆக்ரா-பரேலி எச்.டபிள்யூ, பாவ்நகர்-ராஜுலா எச்.டபிள்யூ, போபால்- ஜபல்பூர் எச்.டபிள்யூ மற்றும் ஹிசார்-ரோதக் ஆகிய பதினேழு நகரங்கள், அவற்றின் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சோதனை இயக்கத்தை நடத்தியது.
குரல் மற்றும் தரவு சேவைகளுக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் செல்லுலார் / மொபைல் நெட்வொர்க் சேவையின் தரத்தை மதிப்பிட இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
குரல் சேவைக்கு: கவரேஜ்; அழைப்பு அமைவு வெற்றி விகிதம்; டிராப் கால் விகிதம்; பிளாக் அழைப்பு விகிதம், ஒப்படைப்பு வெற்றி விகிதம்;
தரவு சேவைகளுக்கு: பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம், வலை உலாவல் தாமதம், வீடியோ ஸ்ட்ரீமிங் தாமதம்.
திவாஹர்