ஆயுஷ் அமைச்சகம் நாடு தழுவிய சிறப்பு இயக்கம் 3.0-ன் இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளது. இது 2 அக்டோபர் 2023 அன்று தொடங்கி 31 அக்டோபர் 2023 அன்று முடிவடைந்தது. பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள் உள்ளிட்ட, நிலுவையில் விவகாரங்கள் தொடர்பான இலக்குகளை அடைவதிலும், கோப்புகளின் மேலாண்மை மற்றும் துாய்மை இயக்கங்கள், பயன்பாட்டு இட அதிகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட இலக்குகளை அடைவதிலும், ஒரு மாத கால இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.
அக்டோபர் 31, 2023 நிலவரப்படி, ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து 876 கோப்புகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. 3 மாநில குறிப்புகள், 75 பொது குறைகள், 3 பிரதமர் அலுவலக குறிப்புகள் மற்றும் 24 பொதுமக்கள் குறை தீர்க்கும் மேல்முறையீடுகள் ஆகியவற்றுக்கு ஆயுஷ் அமைச்சகத்தால் வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுள்ளன. அமைச்சகம் 20 தூய்மை இயக்கங்களை ஏற்பாடு செய்ததன் மூலம் 100 சதவீத இலக்கை அடைந்தது. குப்பைகளை அகற்றி தேவையற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் அமைச்சகத்திற்கு ரூ. 6,97,270 வருவாய் கிடைத்துள்ளது. மேலும் 2300 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கொடேச்சா, இலக்கை மதிப்பீடு செய்து, அதை அடைய அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். மேலும் இந்த இயக்கத்தின் அன்றாடப் பணிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகத்தின் பல்வேறு நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் கவுன்சில்களின் வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
எம்.பிரபாகரன்