28 செப்டம்பர் 1971 அன்று நாகாலாந்தின் திமாபூரில் 57 வீரர்களுடன் பங்களாதேஷ் விமானப்படை உருவாக்கப்பட்டது. அந்த நாளில்தான் பாகிஸ்தான் விமானப்படையில் இருந்து விலகிய சுல்தான் அகமது. பத்ருல் ஆலம், சிவிலியன் விமானி சகாபுதீன் அகமது ஆகிய மூன்று விமானிகள், முதல் பங்களாதேஷ் விமானப்படை பிரிவாக கருதப்படும் திமாபூரில் இந்திய விமானப்படையின் மூலம் தங்கள் பயிற்சியைத் தொடங்கினர். 1971 டிசம்பர் 16-க்குப் பிறகு, பங்களாதேஷ் பிறந்தவுடன், ஒரு விமானம் டாக்காவில் பங்களாதேஷிடம் இந்தியாவால் ஒப்படைக்கப்பட்டது.
பங்களாதேஷ் படைகளின் வீரர்களிடையே விடுதலைப் போரின் உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்க, பங்களாதேஷ் விமானப்படையின் 20 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு கேப்டன் தன்வீர் மர்சான் தலைமையில் நேற்று (31 அக்டோபர் 2023), பங்களாதேஷ் விமானப்படை எழுச்சி தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக திமாபூருக்கு வருகை தந்தனர். 1971 விடுதலைப் போரின் போது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருந்த முக்கிய இடங்களைப் பார்வையிடுவதில் பங்களாதேஷ் படையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் பயணம் இரு நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையிலான ஆழமான உறவுகள் மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கிறது. அத்துடன் பங்களாதேஷ் விடுதலையில் இந்திய விமானப்படையின் பங்கை அங்கீகரிக்கிறது.
திவாஹர்