மின்சாரம் தாக்கி பசு மாடு பலி!-திருச்சி அருகே நடந்த துயரம்.

மின் கசிவுக்கு காரணமான இரும்பு கம்பம்.

மின்சாரம் தாக்கி பலியான பசு மாடு.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழமுல்லக்குடி ஊராட்சி, காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் த/பெ கனகராஜ் (லேட்) இவர் சொந்தமாக மாடு வளர்த்து சிறிய அளவில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இன்று (08.11.2023) மாலை 5.30 மணியளவில் கடுமையான காற்று மழை பெய்ததால் மேச்சலுக்கு சென்ற தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு பாஸ்கர் வீட்டை நோக்கி வந்தார். காந்திபுரம் மாதா கோவிலுக்கு மேற்கே 10 மீட்டர் தூரத்தில் வந்தபோது தெருவோரத்தில் இருந்த இரும்பு டெலிபோன் கம்பத்தில் மின் ஒயர் பட்டு மின் கசிவு ஏற்பட்டதில் எதிர்பாராத விதமாக அதன் அருகில் சென்ற பசு மாடு ஒன்று மின்சாரம் தாக்கி அவர் கண் முன்னே துடி துடித்து பலியானது. அதிர்ஷ்டவசமாக மாட்டின் உரிமையாளர் பாஸ்கர் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினார்.

மாட்டின் உரிமையாளர் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி கவிதா.

மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்தது குறித்து கீழமுல்லக்குடி கிராம நிர்வாக அலுவலருக்கும், அரசு கால்நடை மருத்துவருக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி பலியான இந்த பசு மாட்டின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 30,000 இருக்கும் என்று தெரிய வருகிறது.

மின் விபத்தில் பசுமாட்டை பறிக்கொடுத்து தன் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாட்டின் உரிமையாளரின் குடும்பத்தாருக்கு, தமிழக அரசின் சார்பில் போர்கால அடிப்படையில் நிதி உதவி வழங்க திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் உடனே பரிந்துரை செய்ய வேண்டும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply