பல்வேறு நிலக்கரி ஏற்றும் இடங்களில் நிலக்கரி மாதிரிகளை சேகரித்தல், தயார்படுத்துதல், பகுப்பாய்வு செய்தல், ஆவணப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பான மூன்றாம் தரப்பு சோதனை முகமைகளை சேர்க்கும் தகுதிக்கான கோரிக்கையை சமர்ப்பிக்கும் தேதியை நிலக்கரி அமைச்சகம் நீட்டித்துள்ளது. இந்தத் தேதி 2023 நவம்பர் 30ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நீட்டிப்பைக் கருத்தில் கொண்டு, அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் starrating.coal.gov.in/tpa_cco என்ற சமர்ப்பித்தல் இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் சமர்ப்பித்தல் இணையதள தொழில்நுட்ப உதவிக்கு,
nic-coll@nic.In -ல் உள்ள உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு திரு ஜோகிந்தர் சிங் (ஓ.எஸ்.டி) சி.சி.ஓவை 9491145117 மற்றும் 8309411420 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எஸ்.சதிஸ் சர்மா