இந்தியக் கடற்படை பாய்மரப் படகு சாம்பியன் பட்டப் போட்டி 2023 நிறைவடைந்தது .

இந்தியக் கடற்படை பாய்மரப் படகு சாம்பியன் பட்டப்போட்டி 2023 மும்பையில் உள்ள இந்தியக் கடற்படை வாட்டர்மேன்ஷிப் பயிற்சி மையத்தில் நவம்பர் 05 முதல் 09 வரை கடற்படை தலைமையகத்தை தளமாகக் கொண்ட இந்திய கடற்படை பாய்மரப் படகு சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்தப் போட்டி இன்டர் கமாண்ட் சாம்பியன் பட்டப்போட்டி ஆகும். இந்தப் போட்டியில் அதிகாரிகள், மாலுமிகள் (அக்னிவீர்கள் உட்பட) மற்றும் கேடட்களை உள்ளடக்கிய மூன்று கடற்படை கமாண்ட்களிலிருந்தும் 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான ஐ.எல்.சி.ஏ 7, பெண்களுக்கு ஐ.எல்.சி.ஏ 6, பிக்னோவா விண்ட் சர்ஃப் போர்டுகள், லேசர் பாஹியா (அணி போட்டி) மற்றும் ஜே -24 (போட்டி பந்தயம்) வகைப் படகு என ஐந்து வெவ்வேறு வகைப் படகுகளில் சாம்பியன் பட்டப்போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் 37 பந்தயங்கள் நான்கு நாட்களில் மூன்று வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டன.

நவம்பர் 09 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில், வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதன் வெற்றியாளர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார். கடலில் உள்ள சவாலான சூழ்நிலைகளில் உயர் தரத்தை நிர்ணயித்ததற்காகவும், சிறந்த பாய்மரப் பயணத் திறன்களை வெளிப்படுத்தியதற்காகவும் கடற்படைப் படகு வீரர்களை அவர் பாராட்டினார்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டப்போட்டி கோப்பை மேற்குக் கடற்படை கமாண்டுக்கு வழங்கப்பட்டது, தெற்குக் கடற்படை கமாண்ட் மற்றும் கிழக்கு கடற்படை கமாண்டு அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.

பாய்மரப் படகு விளையாட்டில் திறமைகளைக் கண்டறிவதற்கும், வளர்ந்து வரும் கடற்படை வீரர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும் ஆண்டுதோறும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

திவாஹர்

Leave a Reply