42 வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுகாதார அரங்கை நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் திறந்து வைத்தார் .

“42 வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சுகாதார அரங்கை நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் திறந்து வைத்தார். சுகாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் வாய்ப்பை இந்த வர்த்தகக் கண்காட்சி வழங்குவதாக அப்போது அவர் கூறினார். இது பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைகளின் வரம்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.” மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இந்த ஆண்டு அரங்கின் கருப்பொருள் “வசுதைவ குடும்பகம்” என்பதாகும்.  

நோய்த்தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் சுகாதார பராமரிப்பில் கவனம் செலுத்தும் பல்வேறு சுகாதார மையங்களை அவர் பாராட்டினார், குறிப்பாக ஆயுஷ்மான் பாவ் திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்படும் விரிவான சுகாதார திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவித்தார். நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், அதனால் தேவையான சிகிச்சையைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், எந்தவொரு பாதகமான தாக்கத்தையும் முடிந்தவரை குறைப்பதன்  அவசியத்தையும் வலியுறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்வு நல்ல சுகாதார நடைமுறைகளை அங்கீகரிப்பதன் மூலம் நடத்தை மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

அரிவாள் செல் ரத்த சோகையின் சமீபத்திய முன்முயற்சியை மேற்கோள் காட்டிய டாக்டர் வி.கே.பால், சரியான சிகிச்சையை உறுதி செய்வதற்கும் நோயின் பாதகமான விளைவுகளைக் குறைப்பதற்கும் ஆலோசனை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம் குறித்துப் பேசிய அவர், “வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது அவசியம்” என்று கூறினார். 1,60,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் நிறுவியதை அவர்  பாராட்டினார், அவை கிராமப்புறங்களில் குறைந்த கட்டணம் மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதில் முக்கியமானவை என்று டாக்டர் பால் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply