லித்தியம், கிராஃபைட் உள்ளிட்ட முக்கியமான கனிமங்களின் 20 தொகுப்புகளை அடுத்த இரண்டு வாரங்களில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் சுரங்க அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று சுரங்கத்துறை செயலாளர் திரு வி.எல்.காந்தா ராவ் தெரிவித்தார். இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2023-இல் “சுரங்கத்திற்கு அப்பால் இணைப்பு” என்ற சுரங்க அரங்கை இன்று திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். முக்கியமான கனிமங்களை சுரங்கம் தோண்டுவதற்கும் பதப்படுத்துவதற்கும் உள்நாட்டு தொழில்நுட்பம் குறித்து ஆராயப்படும் என்று கூறினார்.
மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தனது காணொலிக் காட்சி செய்தியில், “கனிமங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும், மேலும் கனிமங்கள் பல தொழில்களுக்கு மூலப்பொருளாக செயல்படுகின்றன, ஆனால் குறைந்த கார்பன்-உமிழ்வு பொருளாதாரத்திற்கு எரிசக்தி மாற்றத்திற்கு முக்கியமானவை மற்றும் இன்றியமையாதவை, மேலும் நமது பிரதமர் அறிவித்தபடி ‘நிகர பூஜ்ஜியம்’ உறுதிப்பாட்டை பூர்த்தி செய்ய தேவையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி, சுரங்கம், ரயில்வே இணையமைச்சர் திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே தனது மெய்நிகர் செய்தியில், நாடு அனைத்து துறையிலும் தன்னிறைவை அடைவதை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இந்தக் கனவை நனவாக்குவதில் சுரங்கத் துறையும் பின்தங்கவில்லை என்றும் கூறினார். சுரங்கத் துறையின் வெற்றி வாய்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சுரங்க அமைச்சகம் ‘இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில்’ பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திவாஹர்