தேசிய பாதுகாப்பு, ராணுவ விவகாரங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் விவாதத்திற்காக 1870 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நாட்டின் பழமையான சிந்தனைக் குழுவான இந்திய ஒருங்கிணைப்பு சேவை அமைப்பு, ஐ.நா மன்றம் 2023- வருடாந்திர கூட்டத்தை புதுதில்லியில் நவம்பர் 21-22-ல் நடத்துகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான மையம் ஆகியவற்றுடன் இணைந்து ‘சர்வதேச மனித உரிமைச் சட்டம், அமைதிகாத்தல்’ என்ற கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்பாராத போர் சூழ்நிலையால் ஏற்படும் கொந்தளிப்பான தருணங்களில் ஐ.நா அமைதி காக்கும் பணிகள் அதிகரித்து வருவதால், சர்வதேச மனிதஉரிமைச்சட்டத்தின் கொள்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வது முக்கியமானதாக மாறியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, அமைதிப்படையினருக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்பு, அமைதி காக்கும் நடவடிக்கைகளில் மகளிர் பங்கு மற்றும் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற சில சமகால பிரச்சனைகளை ஆழமாக ஆராய இந்த அமர்வுகள் உதவும்.
அமைதிகாக்கும் பணியின் போது சவால்களை நேரடியாக எதிர்கொண்ட கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களால் முன்வைக்கப்படும் நுண்ணறிவு கண்ணோட்டங்களை இந்த அமைப்பு உள்ளடக்கும். இந்திய ஆயுதப்படைகள், வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் முக்கிய உரை நிகழ்த்துவார்கள். இக்கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெறும்.
எம்.பிரபாகரன்