ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் நீட்டிக்கப்பட்ட செயல்பாட்டு நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படை கப்பல் சுமேதா, 21 நவம்பர் 2023 அன்று மொசாம்பிக்கின் மாபுடோவை அடைந்தது. நீண்டகால தூதரக உறவுகள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இரு கடற்படைகளுக்கும் இடையிலான பரஸ்பர செயல்பாட்டை அதிகரிக்கவும் இந்தத் துறைமுகப் பயணம் அமைந்துள்ளது. 2023 நவம்பர் 23 முதல் 25 வரை தொழில்முறை தொடர்புகள், திட்டமிடல் மாநாடுகள், கூட்டுப் பொருளாதார மண்டலக் கண்காணிப்பு ஆகியவை இந்தப் பயணத்தின் போது திட்டமிடப்பட்டுள்ளன. துறைமுக அழைப்பின் போது, மொசாம்பிக் கடற்படை மற்றும் மாபுடோ நகர மேயர் உள்ளிட்ட மொசாம்பிக்கின் பல்வேறு பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கடற்படை கமாண்டன்ட் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை மேற்கொண்டார்.
மொசாம்பிக்கும், இந்தியாவும் பாரம்பரியமாக இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன, ஜனநாயகம், வளர்ச்சி, மதச்சார்பின்மை ஆகியவற்றின் பொதுவான மாண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. நட்புறவின் பாலங்களை உருவாக்கவும், நட்பு நாடுகளுடனான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்தியக் கடற்படைப் பணியின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படைக் கப்பல்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் நிறுத்தப்படுகின்றன.
ஐ.என்.எஸ் சுமேதா விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட இந்தியக் கிழக்குக் கடற்படையின் ஒரு பகுதியாகும், கடந்த காலங்களில் பல்வேறு கடற்படை ஆதரவு நடவடிக்கைகள், கடலோர மற்றும் கடல் ரோந்து, கடல் கண்காணிப்பு மற்றும் எச்.ஏ.டி.ஆர் பணிகளை சுமேதா மேற்கொண்டுள்ளது.
திவாஹர்