ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்கள் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையே பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023, நவம்பர் 23 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் , பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைப் பணியாளர் குழுவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ , அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் (டி.எஸ்.ஐ.ஆர்) செயலாளர் டாக்டர் என்.கலைச்செல்வி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியப் பாதுகாப்பு பணியாளர் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் , அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழும ஆய்வகங்கள், இந்திய பாதுகாப்பு பணியாளர்கள் தலைமையகம் மற்றும் ஆயுதப்படைகளான இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவற்றுக்கு இடையே கூட்டுத்தொடர்புகளைத் தொடங்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
எஸ்.சதிஸ் சர்மா