அகமதாபாத்தில் நடைபெற்ற உலக மீன்வள மாநாடு இந்தியா 2023 வெற்றிகரமாக நிறைவடைந்தது: நேரடி மற்றும் இணையதள வாயிலாக நடைபெற்ற மாநாடு பெரும் வெற்றியடைந்தது .

அகமதாபாத்தில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா 2023, நாட்டின் மீன்வளத் துறையில் புத்தொழில், தொழில்முனைவோர் சூழலை ஊக்குவிக்க காரணமாக அமைந்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, அகமதாபாத்தில் இந்த நிகழ்வை அசாதாரணமான முறையில் ஏற்பாடு செய்ய ஆதரவளித்ததற்காக குஜராத் அரசுக்கு நன்றி தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொண்ட மீனவ சமுதாயத்தினருக்கும், பிற பிரதிநிதிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

வெளிநாட்டு பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள், தொழில்முனைவோர் மற்றும் பிற பங்குதாரர்களை ஒருங்கிணைத்து மத்திய அரசின் மீன்வளத் துறை உலகளாவிய மீன்வள மாநாட்டை ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறை என்று மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.

நேரடி மற்றும் இணையதள  வாயிலாக  நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டில், 14,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.  மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் ராஜீய பிரதிநிதிகள், உலகளாவிய மீன்வள விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், மீன்வள சமூகங்கள் மற்றும் முதலீட்டு வங்கியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஐந்து தொழில்நுட்ப அமர்வுகள்,  நாடுகளுக்கு இடையேயான விவாதங்கள் ஆகியவை நடைபெற்றன.

கண்காட்சியில், புத்தொழில் நிறுவனங்கள், மீனவர்கள், உணவு அரங்குகள், மீன் காட்சியகங்கள் செயல்விளக்கம், செயற்கை பவளப்பாறைகள், கடற்பாசி வளர்ப்பு, மீன் தீவனம், முத்து பிரித்தெடுத்தல், தகவல் தொடர்பு அமைப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரும் மையங்கள், பல வகை குஞ்சு பொரிப்பகங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

எம்.பிரபாகரன்

Leave a Reply