மறுவாழ்வுக்கான தலைமை இயக்குநரகம் முன்னாள் படைவீரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது .

பாதுகாப்பு அமைச்சகம், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை மறுவாழ்வுக்கான தலைமை இயக்குநரகம் ஆகியவை 2023, நவம்பர் 23 அன்று குருகிராமில் உள்ள துண்டஹேரா ராணுவ நிலையத்தில் ஒரு வேலைவாய்ப்பு கருத்தரங்கு, வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. இதில் ஹரியானா, தில்லி மற்றும் அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

மொத்தம் 1,326 காலிப்பணியிடங்களை நிரப்பும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 33 நிறுவனங்கள் பங்கேற்றன. ராணுவம், விமானப்படை , கடற்படையைச் சேர்ந்த 1,200 முன்னாள் ராணுவத்தினர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். வரும் மாதத்தில் சண்டிகர் மற்றும் விசாகப்பட்டினத்தில் மேலும் இரண்டு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முன்னாள் படைவீரர்கள் உயர் மேற்பார்வையாளர்கள், மத்திய / உயர் நிலை மேலாளர்கள் , திட்ட இயக்குநர்கள் ஆகிய பல்வேறு பதவிகளில் பணியமர்த்தப்படுவார்கள். இந்நிகழ்ச்சி பெருநிறுவனங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. முன்னாள் படைவீரர்கள் தங்கள் சேவைக் காலத்தில் பெற்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைப் பெற்றாலும், அனுபவம் வாய்ந்த, ஒழுக்கமான மற்றும் பயிற்சி பெற்ற நபர்களின் குழுவிலிருந்து பணியமர்த்துவதன் மூலம் பெருநிறுவனங்கள் பயனடைகின்றனர்.

திவாஹர்

Leave a Reply