தேசிய மாணவர் படை (என்.சி.சி) தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது; வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புச் செயலாளர் அஞ்சலி .

1948 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சீருடை இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படை (என்.சி.சி) நாளை (நவம்பர் 26, 2023) அதன் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இது ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் அசைக்க முடியாத தேசபக்தி போன்ற முக்கிய கொள்கைகளுடன் இளைஞர்களை வழிநடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே, இன்று (நவம்பர் 25, 2023) புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் என்.சி.சி சார்பாக, பணியின் போது வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் என்.சி.சியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்த பாதுகாப்பு செயலாளர் திரு கிரிதர் அரமானே, என்.சி.சி இன்று ஒரு அற்புதமான மைல்கல்லை எட்டியுள்ளது என்றார். இந்த 75 ஆண்டுகளில், அதன் நெறிமுறைகளில் உறுதியாக நின்று இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாக உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  என்.சி.சி அமைப்பின் எல்லையற்ற சாதனைகளுக்கு தனது பாராட்டுக்களை அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதுதில்லியில் உள்ள கமலா நேரு கல்லூரியின் என்.சி.சி பிரிவைச் சேர்ந்த 26 மாணவிகள் தேசபக்திப் பாடல்களைப் பாடினார்கள். 

எம்.பிரபாகரன்

Leave a Reply