‘குல்மோஹர்’ திரைப்படம் மூன்று தலைமுறைகளாக குடும்பம் மற்றும் வீட்டின் அர்த்தங்களை ஆராய்கிறது!-இயக்குநர் ராகுல் வி. சித்தெல்லா .

கோவாவில் நடைபெற்று வரும் 54-வதுசர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பிரிவில் ராகுல் வி.சித்தெல்லா எழுதி இயக்கிய குல்மோஹர் என்ற இந்திப் படம் திரையிடப்பட்டது. இந்த படம் குடும்பம் மற்றும் வீடு என்பதன் அர்த்தங்களை ஆராய்கிறது, பத்ரா சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களின் தனிப்பட்ட கதைக்களங்களை இது ஒன்றிணைக்கிறது.

பத்திரிகைத் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் உரையாடிய, குல்மோஹர் திரைப்படத்தின் முன்னணி நடிகரான மனோஜ் பாஜ்பாய், படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரால் உருவாக்கப்பட்ட குடும்ப சூழல் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றார். படப்பிடிப்பின்போது நிலவிய “குடும்பமும் அதன் உணர்வும் அதைத் தாண்டி நீண்டதாக அவர் தெரிவித்தார். இத்திரைப்படம் குடும்பம், அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட உறவுகளை சித்தரிக்கிறது என்று அவர் கூறினார்.

குல்மோஹர் பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட படத்தின் இயக்குனர் ராகுல் வி சித்தெல்லா, குடும்பம் மற்றும் வீட்டின் அர்த்தங்கள் மற்றும் வரையறை காலப்போக்கில் மாறுகிறது என்றார். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே எப்போதும் முக்கியம் என்று அவர் கூறினார். மூன்று தலைமுறையாக குடும்பம், வீடு என்ற அர்த்தத்தை இப்படம் பேசுகிறது என அவர் கூறினார்.  குல்மோஹர் என்ற தலைப்பு ஒரு கவித்துவமானது என்றார். குல்மோஹர் மிக விரைவாக பூத்து விழும் ஒரு மலர் என்றும் அதன் தன்மை தாம் சொல்ல முயற்சிக்கும் கதைக்கு பொருந்துவதாகவும் மனோஜ் பாஜ்பாய் கூறினார்.

மனோஜ் பாஜ்பாய், ஷர்மிளா தாகூர், சிம்ரன், அமோல் பாலேகர் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுடன் இந்தி படத்தில் அறிமுகமாவது ஒரு கனவு போன்றது என்று குல்மோஹர் படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவரான சாந்தி பாலச்சந்திரன் கூறினார். மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டிய சாந்தி பாலச்சந்திரன், மலையாளத் திரைப்படத் துறையைப் போலல்லாமல், இந்தி சினிமா ஒரு பெரு நிறுவனக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடித்த “சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை” படத்தின் இயக்குனர் அபூர்வ் சிங் கார்கியும் உரையாடலில் பங்கேற்றார். 

திவாஹர்

Leave a Reply